
சுபமான வேலை… ஆதார் கார்டுடன் மொபைல் நெம்பரை இணைக்கனுமா? அப்போ இதை செய்யுங்க!
வீட்டில் இருந்தபடியே ஈஸியாக மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
அதாவது ஒரு இந்திய குடிமகனின் முக்கிய அடையளமாக விளங்குவது ஆதார் அட்டை தான். அந்த ஆதார் அட்டையானது அத்யாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் எல்லாவற்றிற்கும் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வங்கி கணக்கு திறப்பது, கடன் பெறுவது என அனைத்திற்கும் தேவைப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் எவ்வித பிரச்சனையிலும் சிக்கிவிட கூடாது என்பதற்காக மத்திய அரசு, ஆதார் எண்ணை பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இணைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதுமட்டும் இல்லாமல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வலியுறுத்தி வருகிறது. மேலும் மொபைல் எண்ணை மாற்றினால் கட்டாயம் அந்த எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
புதிய மொபைல் எண்ணை இணைக்க அல்லது மொபைல் எண்ணை மாற்ற இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று வங்கி சேவை படிவத்தை பூர்த்தி செய்யவும்.
பின்னர் ஆதாருடன் இணைக்க வேண்டிய போன் நெம்பரை தேர்வு செய்த பிறகு அருகில் இருக்கும் வங்கி கிளையிலிருந்து உங்களுக்கு கால் வரும். அதன் பின்னர் உங்கள் வீட்டிற்கே தபால்காரர் வந்து விவரங்களை சரிபார்ப்பார்.
இதன் பிறகு, உங்கள் போன் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும். இவ்வாறு ஈஸியாக உங்கள் நெம்பரை இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி
Publisher: jobstamil.in