7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கமாக..! காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
தமிழ்நாடு:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் – விண்ணப்பதாரர்களின் தகவல்களை சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் இன்று தொடங்குகிறது
அரசியல் தலைவரகளை சந்தித்தது நட்பு ரீதியானது மட்டுமே – வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது தனது வழக்கம் என ரஜினிகாந்த் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் அறிக்கை – மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை
அதிமுக மாநாட்டில் பல நூறு கிலோ உணவு வீணான விவகாரம் – நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தொண்டர்கள் குற்றச்சாட்டு
அதிமுக தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமரும் – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – 6 பேர் படுகாயம், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழிப்பறி
இந்தியா:
தென் ஆப்ரிக்காவில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்
சூழல் சாதகமாக இல்லாவிட்டால் லேண்டரை தரையிறக்கும் திட்டம் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் – இஸ்ரோ தகவல்
தமிழ்நாடு கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது – காவிரி விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டம்
I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் – டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
வாக்காளர்கள் கேள்வி கேட்டால் தான் நாடாளுமன்ற சபைகளில் அமளி குறையும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து
மத்தியபிரதேசம், சத்தீஷ்கரில் முகாமிட்டுள்ள வெளிமாநில பாஜக எம்.எல்.ஏக்கள் – தேர்தல் தொடர்பான கள ஆய்வு நடத்த திட்டம்
உலகம்:
மீண்டும் அமெரிக்க அதிபரானால் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் – டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி
உக்ரைன் விமானிகளுக்கு எஃப்-16  ஜெட் விமானங்களைப் பயிற்றுவிக்க கிரீஸ் முடிவு – ஜெலன்ஸ்கி தகவல்
எலான் மஸ்க் நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழ்யர்களின் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு
ஏழு குழந்தைகளை கொடூரமாக கொன்ற பெண் செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு
விளையாட்டு:
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காப்ன இந்திய அணி அறிவிப்பு – மீண்டும் அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் – சாஹல் நீக்கம்
சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் – ஆசியக்கோப்பை தொடருக்கு தேர்வாகாத நிலையில் சாஹல் இன்ஸ்டாகிராம் பதிவு
தந்தை இறந்தது தெரியாமல் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் கேப்டன் ஓல்கா கர்மோனா
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்  சாம்பியன்ஷிப் – தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அனாஹத் சிங்
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.abplive.com
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *