பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் 20,000 கோடி ரூபாய்க்கு மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் வளர்ச்சித்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது வெறும் 3,680 கோடி ரூபாய்தான். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 20,000 கோடிக்கு மேல் இந்த துறையில் செலவிடப்பட்டுள்ளது. மீனவர்கள், சூழல் அமைப்பு, கரையோர பகுதியின் நலன் தொடர்பாக மோடி கொண்டுவந்துள்ள திட்டங்கள், நலன்கள் பற்றி கூற நான் வந்துள்ளேன். இங்குள்ள மீனவர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டிச் சென்று மீன் பிடித்துவருவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. மோடி தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் எவ்வளவு பாசம், நேசம் வைத்திருக்கிறார் என்பதை பலமுறை வெளிப்படுத்தி உள்ளார். காசி தமிழ் சங்கமம், செளராஷ்ட்ரா தமிழ் சங்கமம் என தமிழுக்காக பல நிகழ்ச்சி நடத்தி உள்ளார். நான் செளராஷ்ட்ரா-வைச் சேர்ந்தவன், இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மீன்வளத்துறையிலும் செளராஷ்ட்ரா, தமிழ் சங்கமம் நடந்துள்ளது” என்றார்.

நிகழ்ச்சிக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி கடல் வழியக சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை சந்திக்கும் சாகர் பரிக்ரமா திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில் தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையில் பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டங்களை மீனவர்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதும். மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து உரையாடுவதுதான் இதன் நோக்கம். மீன்வளத்துறை மிக வேகமாக வளர்ந்துவருகிறது. இறால் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் உலகில் 4 வது இடத்தில் உள்ளோம். இந்திய பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி சென்றுகொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செல்ல உள்ளோம். ஆழ்கடலில் மீன் பிடிக்க ஏற்கனவே 50 படகுகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஆர்.ஓ மூலம் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீனவர்கள் கடல் வழியாக எந்த மாநிலத்துக்கும் செல்வதற்காக கோரிக்கை வைத்துள்ளனர். மாநிலம்விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
