இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியிருப்பதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்… உறுப்பினர்கள் தேர்வில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


தி.மு.க ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால், அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் தி.மு.க அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார். அப்போது அவர், “டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு, எந்தெந்த சமுதாயங்களிலிருந்து இதுவரை ஆள் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அவற்றிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற சமூகநீதி கண்ணோட்டத்தில்தான் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபுவை பரிந்துரைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநர், அவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது கண்டனத்துக்குரியது” எனக் கட்டமாகத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com