வங்கக் கடலில் உருவாகியிருக்கும் `மிக்ஜாம் புயல்” வட தமிழக கடற்கரை ஓரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இவை தவிர சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. இதனால், நிவாரண முகாம்கள், பாதுகாப்பு, மையங்கள், பேரிடர் மீட்புப் படையுடன் தயார் நிலையில் இருக்கும் தமிழ்நாடு அரசு, மக்களுக்கு சில அறிவுரை வழங்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (03-12-2023) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவை, “இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
நன்றி
Publisher: www.vikatan.com
