இந்த அரசு பசுக்களைப் பாதுகாக்க விரும்பியது. அதை நான் ஆதரிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், பசுக்கள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கவில்லை. அந்தப் பசுக்கள், ஜெர்சியா, கிர் பசுவா அல்லது சாஹிவாலாவா என்று பார்க்க நீங்கள் காத்திருக்கவில்லை. அப்படியே சென்று பசு கூடங்களை கட்டினீர்கள். ஆனால், நாங்கள் காத்திருக்க பெண்கள் என்ன பசுக்களை விடவும் குறைந்தவர்களா…

பா.ஜ.க-வின் உண்மையான இரட்டைப் பேச்சு பாணியைப் பார்க்கையில், மக்களவையில் 33 சதவீத பெண்களை அமர வைப்பது எப்போது என்பது எங்களுக்குத் தெரியாது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு ஒருபடி மேலாக தொகுதி வரையறை எப்போது என்பதும் தீர்மானிக்கப்படவில்லை. கனிமொழி (திமுக எம்.பி) கூறியது போல, தரவுகளின்படி கேரளாவுக்கு 0 சதவீத இடங்களும், தமிழ்நாட்டுக்கு 26 சதவிகித இடங்களும் மட்டுமே. ஆனால், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 79 சதவிகித இடங்கள் அதிகரிக்கும். இதைவிட பெரிய ஜும்லா இருக்க முடியுமா… 2024-ஐ மறந்து விடுங்கள், 2029-ல் கூட இது சாத்தியமில்லை” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
