மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் பைக், எஸ்யூவி கார்கள் மூலம் இஸ்ரேலின் தெற்கு நகரங்களுக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த தாக்குதல்களால் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
State Of War:
இஸ்ரேல் அறிவித்திருக்கும் ‛ஸ்டேட் ஆப் வார்” என்பது நாட்டை காக்க அறிவிக்கப்படும் ஒரு வகையான அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானப் பிறகு அரசே, ராணுவத்தை அணியாக திரட்டி சண்டையிடும். ஆயுதப்படைகளில் மக்களை இணைத்து போரிட வைக்கும். உணவு, பிற அடிப்படை தேவைகளை மக்களுக்கு வழங்கும். மேலும், ஊரடங்கு சட்டம், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை நடைமுறையில் அமலுக்கு கொண்டு வரப்படும். இந்த நடவடிக்கைகளை கொண்டு வருவதான் மூலம் பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முழுவீச்சில் தயாராகியிருப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் பல இடங்களில் இஸ்ரேல் தனது பதிலடியை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலுக்குள் நுழைய முயலும் குழுக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடங்கி இருக்கிறது.
காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் குழுவினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவிய பின்னர், இஸ்ரேல், பிரதமர், “We Are At War” என தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
