தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் பெரும் அவதி. கோவை மதுரை நெல்லை என பல்வேறு நகரங்களுக்கு, தொடர் விடுமுறையை கழிக்க சென்ற மக்கள் தற்போது சென்னைக்கு திரும்ப ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விடுமுறை நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் தற்போது மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வால் திரும்ப ஊருக்கு வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து இப்படி எந்த அறிவிப்புமின்றி விடுமுறை நாட்களில் கட்டணத்தை உயர்த்துவது இது முதல் முறை இல்லை. இது தொடர்பான புகார்கள் அதிகரித்ததால் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (டிஎன்பிஓஏ), இம்முறை கட்டண உயர்வுப் பட்டியலை வெளியிட்டது. பட்டியலைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உதாரணத்துக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான கட்டணமாக 1,930 ரூபாய் முதல் 3,070 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கோவைக்குக் குறைந்தபட்சமாக 2,050 ரூபாய் முதல் 3,310 வரையிலுமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நன்றி
Publisher: 1newsnation.com