இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி, “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்றார்.

அதிருப்தி தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தாலும், நகரமன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தனர் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர். அப்போது பேசிய நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, “திண்டிவனத்திற்கு புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை மேம்பாடு என அமைச்சர் மஸ்தான் நிறைய செய்திருக்கிறார். வெளிநடப்பு செய்தவர்களும் திமுக என்ற ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் தான். அமைச்சர் மீது யாரும் அவதூராக பேசக்கூடாது. அமைச்சருக்கும் நகராட்சிக்கும் சம்பந்தமில்லை. இருந்தாலும் நகரமன்ற உறுப்பினர்கள் சிலர், அமைச்சர் மீது அவதூராக பேசியிருக்கிறார்கள். இதனால் இந்த ஆட்சிக்கு ஒரு கஷ்டம் தான்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
