Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தான் அனு இம்மானுவேல். இவர், தற்போது கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது அனு இம்மானுவேல் தானும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்ததாக பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வரும்படி வெளிப்படையாகவே என்னிடம் கேட்டார்கள். நான் எனது குடும்பத்தின் உதவியுடன் தான் இதை எல்லாம் சமாளித்தேன் என்றார்.
மேலும், பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் முன்னேறி வர வேண்டும் என்று அனு இம்மானுவேல் அறிவுரை வழங்கினார்.
The post ’என்கிட்டையும் அந்த மாதிரி நடந்துக்கிட்டாங்க’..!! ’எனது குடும்பத்தின் உதவியுடன் தான் நடந்தது’..!! அனு இம்மானுவேல் பகீர் தகவல் appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com