அடுத்து ஜாதகத்தில் ஜீவனக்காரகன் என்று சொல்லக்கூடிய சனி, ராகு கேதுவுடன் தொடர்பில் இருந்தாலும், இந்த ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்காது. உங்களுக்கு பிறந்த கால ஜாதகத்தில், நான்காம் அதிபதி என்று சொல்லக்கூடிய ராகு, கேது, சனியோடு தொடர்புகொண்டு இருந்தாலும் ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக இருக்காது. உங்களின் சந்திரன் என்று சொல்லக்கூடிய கிரகம் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து இருந்தாலும், சுய தொழில் என்பது சரிவராது. அடுத்து உங்களுக்கு கடனைத்தரக்கூடிய ஆறாம் அதிபதி, நஷ்டத்தைத் தரக்கூடிய எட்டாம் அதிபதி, விரயத்தைத் தரக்கூடிய பன்னிரெண்டாம் அதிபதி ஆகியவை தொடர்புகொண்ட தசாபுத்திகள் நடந்தாலும், நீங்கள் ரியல் எஸ்டேட் செய்யும்போது கடனை அடைவீர்கள். ஆகையால், இவற்றை எல்லாம் பார்த்து தான் ரியல் எஸ்டேட் தொழிலை செய்யவேண்டும்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com