மத்திய வேளாண்துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் அமைச்சராக பிரகலாத் சிங் படேலும் இருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங், ரிதி பதக் ஆகியோரும், ராஜஸ்தானில் தியா குமாரி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும், சத்தீஸ்கரில் கோமதி சாய், அருண் சாவோ ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினரான மீனாவும் எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

அவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். இந்த பத்துப் பேரும் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வின் முகங்களாக மாற்றும் நோக்கத்துடன் களமிறக்கப்பட்டவர்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
