தேனி மாவட்டத்தில் சமூக சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை :
காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி பணியிடங்கள் உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காலிப் பணியிடம் :-
தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 41 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரும் விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள், தேனி மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 05.10.2023 & 06.10.2023 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் 11.10.2023-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு
ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 560 வீதம் ஊதியமாக ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.
அலுவலக முகவரி :-
வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் – முதல் தளம், தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com