Raise Tax on All Vehicles

சென்னையில் நேற்று நடந்த சட்டசபையில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் சட்ட மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:
வரி உயர்வு:
போக்குவரத்து துறையில் பல வரி விதிப்பு முறைகளை தமிழக அரசு பல்வேறு ஆண்டுகளில் மேற்கொண்டு உள்ளது. மேலும் 2012-ம் ஆண்டுக்கு பின் அரசு எந்த வரிகளையும் உயர்த்தவில்லை. ஆனால் இப்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரி வாயிலாக பெறப்படும் வருமானம் குறைவாக உள்ளது
என்றும், இதனால் அரசுக்கு குறைவான வருமானம் மட்டுமே வருகிறது என்றும் கூறினார்.
அதனால் மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் நோக்கத்தில் தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்ய வேண்டும் என்றும், அந்த திருத்தங்களை மேற்க்கொள்ள தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
எந்த வகை வாகனங்கள்?
அந்த வகையில் சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள் அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், மேலும் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள் டாக்சிகள், ‘கேப்’கள் போன்ற எல்லா வகை மோட்டார் வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.
Also Read >> ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் டபுள் டமாக்கா அறிவிப்பு! விவரங்கள் இதோ…
அந்த வகையில் சரக்கு வாகனங்களுக்கு சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடை இருந்தால் ஆண்டு வரியாக ரூ.3,600 மாகவும், மேலும் 3 ஆயிரம்- 5.500 கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3,100 வரை எடைக்கு ஏற்ப வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான (டிரைவர் மற்றும் கண்டக்டர் நீங்கலாக 35 பேர் பயணிக்கும் கொள்ளளவு கொண்ட வாகனம்) காலாண்டு வரி ரூ.4,900-மாகவும் மேலும் 35-க்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரமாகவும், படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் (இருக்கையும் படுக்கையும் உள்ளவை) வரை வரி உயர்த்தப்படுகிறது.
அதோடு இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படும் என்றும், சென்னை மற்றும் மதுரை கோவை நகர சுற்றுப்பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பஸ்களுக்கு மேல்வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
எடையேற்றப்பட்ட வாகனங்களுக்கு 600 கிலோவுக்கு மிகாத 50 சி.சி. உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிக்கப்படும். பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (டிரைவர் அடங்கலாக 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக .ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் வரி விதிக்கப்படும்.
மேலும் கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.15 ஆயிரமும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
மோட்டார் சைக்கிள்:
இதனை தொடர்ந்து புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில், அதன் விலையில் 10 சதவீதமும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதமும் என்ற வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம்(ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்ற 10.25 சதவீதம்; 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) 8 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
2 முதல் 11 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி குறைந்தது 6 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 9.75 மேல் வரை (அதன் விலைக்கு ஏற்ப) நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி 5 லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில், அதன் விலையில் 12 சதவீதம்; ரூ.5லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்றால் 13 சதவீதம்; ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்றால் 18 சதவீதம்; ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 20 சதவீதம் என விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 4 வகையிலான விலைகளிலுள்ள வாகனங்களில் ஒரு ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பசுமை வரி:
மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750 என்றும், மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என்றும் விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375-மாகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250-ஆயிரமாகவும், மற்ற வாகனங்களுக்கு ரூ.3-ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.டிரைவர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக்கூடிய புதிய சுற்றுலா வாடகை கார்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 12 சதவீதம் (ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவை); 13 சதவீதம் (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டவை); 18 சதவீதம் (ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டவை); 20 சதவீதம் (ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை) என நிர்ணயிக்கப்படுகிறது. அரசின் கொள்கைப்படி பேட்டரி வாகனங்களுக்கு வரி இல்லை.
இவ்வாறாக மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
கட்சிகள் எதிர்ப்பு:
இந்த மசோதாவை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப் பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவரை தொடர்ந்து சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் இதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in
