மக்களே…! சென்னையில் ஸ்ட்ரைக்…! தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கிடையாது…!

மக்களே…! சென்னையில் ஸ்ட்ரைக்…!  தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கிடையாது…!

ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், பைக் டாக்சிகளை தடை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரி இன்று மற்றும் நாளை இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை 14 வாகன ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.

மேலும், பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இரண்டு நாட்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், வரும் 18ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கால்டாக்சி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். இதனால் 80 சதவீத கால் டாக்சிகள் நகரத்தில் இயங்காது.

இதுகுறித்து தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் எம்.பூபதி கூறியதாவது: கால்டாக்சி நிறுவனத்தினர் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சேவைகளை இயக்குகின்றனர். “மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு 2020 இல் வெளியிட்டது, ஆனால் அது மாநிலத்தில் செயல்படுத்தப்படவில்லை.

விதிமுறைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும், ஓட்டுநர்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கவும் இந்த விதிமுறை உதவும்,” என்றார். போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *