
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் உள்ளது. அதிகரித்து வரும் சிலிண்டரின் விலை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி, சில ஆண்டுகளில் மட்டும் ஒரு சிலிண்டரின் விலை ரூ.500 வரை அதிகரித்துள்ளது.
சிலிண்டரின் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் சிலிண்டரின் விலையை ரூ.200 வரை குறைந்தது. அதன்படி, தற்பொழுது வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ALSO READ : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை கொள்முதல் விலை..! பொதுமக்கள் வேதனை!!
இந்நிலையில், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருவதாலும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் இதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.800 க்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்கப்படலாம் எனவும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
