அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். “நெல்லை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்துவதில்லை. மேயர் சரவணன் பாரபட்சமாக நடக்கிறார்” எனக்கூறி ஏற்கெனவே உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மேயர் சரவணன் மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனி மாமன்றக் கூட்டத்தை முறையாக நடத்த உத்தரவிட்டனர். ஆனால், அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மேயர், கவுன்சிலர்களிடையே மோதல் போக்கு தொடர்கிறது. இந்த நிலையில், மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை தி.மு.கவின் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையாளர் சுபம் ஞானதேவ் ராவிடம் ஒப்படைத்தனர். மாநகராட்சியின் கவுன்சில் செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தடை விதித்தால் மட்டு, ஆணையர் உத்தரவுப் படி அடிப்படை பணிகள் நடக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
