மத்திய கிழக்கில் சம்பவம் செய்துள்ள “லியோ” படம்…! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மத்திய கிழக்கில் சம்பவம் செய்துள்ள “லியோ” படம்…! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில், சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் முன்பதிவு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளது. அதன்படி லியோ படம் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம். அதில் தமிழ்நாட்டில் 9 கோடி, கேரளாவில் 7 கோடி, கர்நாடகாவில் 6.25 கோடி, இதர மாநிலங்களில் 1 கோடி என இந்தியாவில் மட்டும் ரூ.20.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் 6 வாரத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு நடைபெற்று வருவதால் அங்கு ரூ.39.5 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லியோ படம் மத்திய கிழக்கில் 175க்கும் மேற்பட்ட இடங்களில் 1,128க்கும் மேற்பட்ட காட்சிகளுடன் 1.7 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் விற்றுள்ளன என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை தமிழில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ரஜினியின் 2.0 திரைப்படம் தக்க வைத்துள்ள நிலையில், அதனை லியோ முறியடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *