நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியும், தங்கிரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபருமான ரியாஸ் அகமது, காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தங்கிரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய தலையாக செயல்பட்ட அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது என்ற லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ராவல்கோட்டில் உள்ள அல்-குதுஸ் மசூதிக்குள் வைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்பு படையினரால் தீவிரவாத அமைப்பின் 4வது தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். 1999-ல் எல்லையைத் தாண்டி வெளியேறிய ரியாஸ் அகமது, எல்லை மாவட்டங்களான பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுவந்துள்ளான். மேலும் லஷ்கர் இ தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாகவும் ரியாஸ் அகமது இருந்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *