Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம்.
மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத் தலைவர் என குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த விவகாரம் அடங்குவதற்குள் இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தில் “இந்திய கொடியின் பின்னணியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் “I blessed to be a Bharatiya” எனக் குறிப்பிட்ட முகப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நான் பாரதியனாக இருப்பது பாக்கியம் என பொருள்படும்படி புகைப்படத்தை வைத்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, தோனி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் கொண்டாட்டத்தின்போது, பாரத் என்ற வார்த்தை இடம்பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் முகப்பு படமாக மாற்றினார். ஆனால், தற்போது அவர், மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
The post ’இந்தியா’வுக்கு பதில் ’பாரத்’..!! ஆதரவு கொடுத்த எம்.எஸ்.தோனி..!! வைரலாகும் புகைப்படம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com