லியோ படம் குறித்து ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை..! என்னவா இருக்கும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம்தான் “லியோ”. இப்படத்தின் படபிடிப்பு முழுமையாக நிலைவடைந்த நிலையில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். லியோ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் லியோ படம் த்ரில்லாக இருக்குமா அல்லது காமெடி கலந்த குடும்பப் படமாக இருக்குமா? என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இருவேறு காதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் லியோ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்று பலரும் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து எந்தவொறு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்பொழுது வரை வெளியாகாமல் உள்ளதால் இப்படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது.

That one word Rajini said about Leo movie What will it be read it more

இதையடுத்து, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் ரஜினிகாந்த் அவர்கள் தனது 170 வது படபிடிப்பை தொடங்கி உள்ளார். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170 வது படத்தின் படபிடிப்பு இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, அவரிடம் லியோ படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விஜய் நடித்திருக்கும் லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார்.

Also Read : என்னது இனிமே மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகையா..? சற்றுமுன் முதல்வர் அறிவித்த புதிய அறிவிப்பு!!

பொதுவாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடித்துக் கொண்ட நிலைமை மாறி தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகமாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் அடித்துகொல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்து வருவதால் ரஜினி ரசிகர்களுக்கு இது கோபத்தை உண்டாக்குகிறது. இதனால், சோசியல் மீடியாக்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிர்கள் மாறி மாறி விமர்சனங்களை கொட்டி வருகின்றனர். ரசிகர்கள் இடையே இவ்வளவு வேறுபாடு இருந்தாலும் ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நீடித்துதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *