தமிழ் சினிமாவின் இளம் வெற்றி இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தும் சாதனை படைத்திருக்கிறது.
முதலில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கௌரவ தோற்றத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. தற்போது விஜய் தனது 68 வது திரைப்படத்தின் சூட்டிங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைப்பதற்கான முயற்சியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அட்லீ.
இவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது பாலிவுட் சினிமாவில் ஜமான் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இதனால் அவருக்கு பாலிவுட்ல தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
எனினும் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை வைத்து விரைவிலேயே ஒரு படம் இயக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் டங்கி திரைப்படம் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதன் பிறகு விஜய் மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com
