காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்!
தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனை செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,696 கன அடி நீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், காவிரியில் நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்த செவ்வாய் கிழமை, அதாவது 26-ம் தேதி பெங்களூருவில் பந்த் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் 40 கன்ன அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்த் காரணமாக மாநில எல்லையில் தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்படுகிறது. மேலும் தமிழக பேருந்துகளும் எல்லை பகுதி வரை மட்டுமே பயணிக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
