` ஆளுநரை மாற்றக் கூடாது!’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், `திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்’ என பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “திராவிடம் என்றால் என்ன என கேட்க வைத்துள்ளது தான் திராவிடம். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்த ஆளுநரை மாற்றக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் புருடா விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை மக்கள் பொருட்படுத்தவில்லை” என்றார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com