Tamil News Live Today: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு,

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு!

அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *