
பொதுவாக முட்டை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது நாமக்கல்தான். ஏனென்றால், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகபடியான முட்டையைகளை உற்பத்தி செய்து மாற்ற மாவட்டங்கள் மற்றும் மாற்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுவதால் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மூலமாகத்தான் முட்டையின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பண்ணையாளர்களிடம் முட்டை விலை தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்பொழுது பண்ணையாளர்கள், மற்ற மாநிலங்களில் முட்டை விலை ஏற்றப்பட்டுள்ளதால் நாமும் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்தனர்.
ALSO READ : அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையத்தின் புதிய தகவல்!!
இதனை தொடர்ந்து, பண்ணையாளர்களின் கோரிக்கையை ஏற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவித்தது. அதன்படி, நாமக்கலில் ஒரு முட்டையின் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த குழு கூட்டத்தில் கறி கோழியின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கறிக்கோழி விலை கிலோ ரூ.77 க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.83க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in