தீபாவளி பண்டிகை எதிரொலி : சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

Tamil News Diwali echoes Air quality worsened in Chennai

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே பட்டாசுகளை வெடித்து வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று காவல்துறை தெயரிவித்தது. அதன்படி, நேற்று சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஏராளமான மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் இருக்கும் மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பட்டாசு வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் காற்று மாசுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

ALSO READ : பள்ளி மாணவர்களுக்கு “அபார்” கார்டு – மத்திய அரசின் புதிய திட்டம்

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், சென்னையில் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் இன்று(திங்கட்கிழமை) காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரக்குறியீடுப்படி, 200 யை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316ஆகவும், வேளச்சேரியில் 301 ஆகவும், அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256 ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleபள்ளி மாணவர்களுக்கு “அபார்” கார்டு – மத்திய அரசின் புதிய திட்டம்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *