Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் சென்ற பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அடுத்த ரெட் கார்ட் நிக்சனுக்கு தான் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, நேற்றைய தினம் வழங்கப்பட்ட டாஸ்கில், இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசினார்களோ, அவர்கள் பேசிய வசனங்கள் டிவியில் போடப்பட்டதால் அதற்குரிய விளக்கத்தினை ஹவுஸ்மேட்ஸ் கொடுத்திருந்தனர். இந்நிலையில், வினுஷாவை பற்றி நிக்சன் சொன்ன கமெண்ட் திரையில் வர அதற்கு நிக்சன் தான் இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வாதிட்டு பிறகு மன்னிப்பும் கேட்டார்.
அதன்படி, நிக்சன் வினுஷாவை பற்றி உருவ கேலி செய்திருப்பதும் அனைவருக்கும் தெரிய வர, ‘நான் தப்பான அர்த்தத்தில் எதுவும் சொல்லல’ என நிக்சன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அர்ச்சனா நிக்சனை நக்கலாக பார்க்கிறார். இதில் கடுப்பாகி செல்கிறார் நிக்சன். அதுமட்டுமின்றி, பிக்பாஸ் வீட்டில் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி என்று தெரிந்தும் நிக்சன் ஐஷு செய்யும் சேட்டைகள் பார்ப்போருக்கு அருவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவரை வெளியேற்ற வேண்டும் என்று பலர் உறுதியாக உள்ளனர். எனினும், பிரதீப் விவகாரத்தில் பிக்பாஸ் குழு எடுத்த முடிவை போல நிக்சன் விவகாரத்திலும் எடுப்பார்களா என சந்தேகமாக தான் உள்ளது. ஏனென்றால், உள்ள இருப்பவர்களே அவர்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.
The post தடவல் மன்னன்..!! நிக்சனுக்கு பிக்பாஸ் குழு கொடுக்கப்போகும் ஷாக்..!! ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com