ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தலாமே. இந்நிலையில் மருத்துவ காரணங்களாக ஜாமீன் கேட்பது திருப்தி அளிக்கவில்லை. அவரின் மருத்துவ அறிக்கையின்படி அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக குறிப்பிடவில்லையே. மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்பதை ஏற்கமுடியாது, ஆகவே வழக்கமான முறையில் ஜாமின் மனு தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சிலர், “மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு ஜாமீன் மனு பதிவு செய்திருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற ஏற்காததால் வழக்கமான முறையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும். அதில் உறுதியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்” என்றார்கள்.
நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலரோ,“உச்ச நீதிமன்றமே செந்தில் பாலாஜிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு, அடுத்து வரக்கூடிய விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து அவர் வெளியே வருவது பெரும் சிக்கலாகிவிடும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
