இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 12 தேதியன்று தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளின் விடுதலைக்கெதிரான வழக்கில் இன்று தீர்ப்புக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
