தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்… இன்று திடீரென குறைந்தது விலை!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் சுப முகூர்த்தங்கள், தீபாவளிப் பண்டிகை என விசேஷங்கள் வரவுள்ள சூழலில், தங்கம் விலை இனி உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 25 குறைந்து ரூ.5,480 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து, ரூ. 77 என்றளவில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, ரூ. 77 ஆயிரம் ஆக விற்கப்படுகிறது. இந்த விலை நிலவரம், மற்ற நகரங்களில் சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்… இன்று திடீரென குறைந்தது விலை! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *