வெளியானது SSC தேர்வு முடிவுகள்…! 3,015 பேர் தேர்வில் தேர்ச்சி…! முழு விவரம் உள்ளே…

வெளியானது SSC தேர்வு முடிவுகள்…!  3,015 பேர் தேர்வில் தேர்ச்சி…! முழு விவரம் உள்ளே…

சமிபத்தில் நடந்து முடிந்த SSC தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமிபத்தில் நடத்தி முடித்தது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 பேர் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதினர். இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்கள் (MTS) தாள் 1 தேர்வு 2022 இன் முடிவை அறிவித்துள்ளது.

மொத்தம் 3,015 விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதில் 1005 பொதுப் பிரிவினர், 250 EWS, 530 SC, 145 ST மற்றும் 715 OBC-யை சேர்ந்தவர்கள் ஆவார்கள் . வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஹவால்தார் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகள் எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ssc.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் SSC MTS தாள் 1 தேர்வு 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைச் சரிபார்க்கலாம். கட்ஆஃப் மதிப்பெண்கள், மதிப்பெண் அட்டை தேதி மற்றும் இறுதி விடைக்குறிப்பு தேதி ஆகியவற்றை ஆணையம் வெளியிட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *