அண்ணனுடன் சந்தோசமாக சென்ற சிறுவன்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் 40 வயதான அழகன். கொத்தனாரான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் 8 வயதான கர்ணன். சம்பவத்தன்று, சிறுவன் தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றுள்ளான். மேலும், சிறுவனின் சகோதரனின் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் இல்லாததால், அந்த வண்டியை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஆற்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதனால், டிராக்டரில் அமர்ந்து இருந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், ஆபத்தான நிலையில் கிடந்த சிறுவனை நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில், நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, சிறுவனின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதயில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *