
சமீப காலமாகவே நடிகர் தனுஷ் நடிக்கும் படங்கள் பலவும் ஹிட் அடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இவர் நடித்த “வேலையில்லா பட்டதாரி” என்ற படம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படமாக மாறிவிட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் படங்களை இயக்கவும் தொடங்கிவிட்டார். இதனைதொடர்ந்து, தனுஷ் தற்பொழுது புதிய படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இந்த புதிய படத்தின் பெயர் “ராயன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
Also Read > சுவாரஸ்ய சம்பவம் : திருட சென்ற இடத்தில் தூங்கியதால் பிடிப்பட்ட திருடன்..!
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ் இயக்கி வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தனுஷ் இயக்கி நடிக்கும் “ராயன்” படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in