Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்தத கனமழை காரணமாக வடக்கு சிக்கிம் பகுதியில், நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்புஏற்பட்டது. இதனால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்தில் பாயும் தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், லச்சன் பள்ளத்தாக்கு பகுதியில், தீஸ்தா நதியின் குறுக்கே உள்ள நடைபாலம் உள்பட 13 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சிக்கிம் – மேற்குவங்கத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, இறப்பு எண்ணிக்கை 26 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது,
மேலும் 142 பேர் இன்னும் காணவில்லை. வெள்ளத்தில் சிக்கி 2413 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 1203 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வீட்டு 8 ராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, 14 ராணுவ வீரர்கள் உடல் தேடப்பட்டு வருகிறது.
The post சிக்கிம் வெள்ள பெருக்கு…! 142 பேர் மாயம்… 2,413 பேர் மீட்பு.., பலி எண்ணிக்கை அதிகரிப்பு…! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
