Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
ஹரியானா மாநிலத்தில், ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, ஒரே இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், அவர்களின் கணவர்கள் கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில், ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரே அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த 3 பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ஹரியானாவை அதிர வைத்துள்ளது.
திடீரென்று, நள்ளிரவு நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் முகமூடி அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அந்த மர்ம கும்பலிடம் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
திடீரென்று வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல், அங்கு இருந்த குழந்தைகள் மற்றும் அந்த மூன்று பெண்களின் கணவர்கள் உள்ளிட்டோரை கட்டிப்போட்டு விட்டு, அவர்கள் கண் முன்னே இந்த மூன்று பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு விடியற்காலை வேளையில், அந்த மூன்று பெண்களையும், ஒரு அறையில் கட்டி போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. காவல்துறையினர், முன்பகை காரணமாக, இந்த கொடூர, பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
The post அதிர்ந்த ஹரியானா….! ஒரே அப்பார்ட்மெண்ட்டை சார்ந்த 3 பெண்கள் கணவர்கள் கண் முன்னே கதற கதற பாலியல் பலாத்காரம்…..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com