Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
மும்மூர்த்திகளில் முதன்மையானவரான பிரம்மா படைப்பு தொழிலையும் விஷ்ணு காக்கும் தொழிலையும், சிவன் அழிக்கும் தொழிலையும் செய்கின்றனர். இந்த மூவரும் இயற்கையின் விதியை காக்க அதாவது படைக்கப்பட்ட அல்லது உண்டான அனைத்தும் ஒரு நாள் அழியும் என்ற விதிக்கு ஏற்ப செயல்படுகின்றனர். இந்த கடவுளர்களின் பிறப்பு பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. சில புராணங்கள் சிவனில் இருந்தே பிரம்மாவும் விஷ்ணுவும் பிறந்தார்கள் என்று கூறுகின்றன. ஆனால் இதுதான் உண்மை என்பதற்கான ஆதாரம் இல்லை. அதே நேரத்தில் சிவன் எப்படிப் பிறந்தார் என்ற கேள்வியும் எழுகிறது. சிவன் ஒரு சுயம்பு அதாவது சுயமாக உதித்தவர் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் முதல் கடவுள், முதல் குரு, முதல் யோகி, பிறப்பில்லாதவன் (அஜா) என்றெல்லாம் சிவன் அழைக்கப்படுகிறார்.
சிவன் பிறப்பு பற்றி ஒரு நம்பிக்கை உள்ளது. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது திடீரென்று ஓர் ஒளி தூண் ஏற்பட்டு ஆகாயம் முதல் பூமி வரை பரவியது. உடனே பறவை உருவெடுத்த பிரம்மா அந்த ஒளியின் தலைப் பகுதியைக் காணச் சென்றார். பன்றி உருவம் எடுத்து பூமியை குடைந்து ஒளித் தூணின் கால் பகுதியைக் காண விஷ்ணு சென்றார். இவருவாராலும் அந்த ஒளித் தூணின் தலை மற்றும் பாதத்தை காணவே முடியவில்லை.
இருவராலும் கண்டறிய முடியாத நிலையில், சிறிது நேரம் கழிந்து அந்த ஒளியில் இருந்து வெளிப்பட்டவர்தான் சிவன் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் முனிவர் ஒருவர் ஒரு முறை சிவனிடம் உம் தந்தை யார் என்று கேட்க அதற்கு சிவன் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உன் தந்தை யார் என்று சிவனிடம் கேட்ட போது பிரம்மா என்று சிவன் கூறுகிறார். பிரம்மாவின் தந்தை யார் என்று கேட்ட போது விஷ்ணு என்று சிவன் பதில் அளிக்கிறார். விஷ்ணுவின் தந்தை யார் என்று கேட்ட போது தான்தான் என்று கூறினார் சிவன். வட்டம் என்பதற்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்பது போல, சிவன், பிரம்மா, விஷ்ணு தொடக்கமும் முடிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.
The post சிவனுக்கும் தந்தை இருக்கிறார்!… யார் தெரியுமா?… ஆச்சர்ய தகவல்கள்.. appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
