நம்முடைய நாட்டில் செம்மறி ஆடுகளாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளாக இருந்தாலும் சரி, பசும் புல்லை மட்டும்தான் சாப்பிடும். ஆனால், இந்த ஆடுகள் பல வினோத செயல்களை ஈடுபட்டதால், ஆடு மேய்ப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து போனார். கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அந்த நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நாட்டில் நடந்த சில வருடங்களாக சில மருத்துவத்திற்காக கஞ்சா செடி பயன்படுத்தலாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக, அந்த நாட்டில் சில வளர்ப்பு பிராணிகளும் இந்த கஞ்சா செடியை சாப்பிடும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. ஆனால், இந்த கஞ்சா செடிகள் விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. அதோடு இதனை சாப்பிடும் விலங்குகள் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேருகிறது. இந்நிலையில் தான், தற்போது, துருக்கி, லிபியா, கிரீஸ் போன்ற நாடுகளில் பெய்த மழையின் காரணமாக, அங்கு செல்ல பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல செம்மறி ஆடுகள் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். பல செம்மறி ஆடுகள் இந்த வெள்ளத்தால் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.
ஆனால், இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்த செம்மறி ஆடுகள் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஆடுகள் கஞ்சாவை சாப்பிடுவது ஒருபுறம் வினோதமான செயல் தான் என்றாலும், அந்த கஞ்சாவை சாப்பிட்ட பிறகு அந்த செம்மறி ஆடுகள் நடந்து கொண்டது இன்னும் வினோதமாக இருந்ததால், அதிர்ச்சி அடைந்த ஆடு மேய்ப்பாளர் இதுபற்றி ஆடுகளின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்த அந்த ஆடு மேய்ப்பாளர் இந்த ஆடுகள் கஞ்சாவை சாப்பிட்டுவிட்டு பல வினோத செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக, பாதி பயிர்கள் அழிந்து போய்விட்டனர் என்று தெரிவித்துள்ளார். அதோடு இது பற்றி தெரிவித்த அந்த ஆடுகளின் உரிமையாளர் தற்போது, ஆடுகள் கஞ்சா செடியை சாப்பிட்டு விட்டன. இது சற்று வினோதமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
