ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த 25 ஆயிரம் கோடி நிதி மோசடி தொடர்பாக 70 அரசியல்வாதிகள் மற்றும் வங்கி நிர்வாகிகளுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகள் விசாரணை நடத்திய மும்பை போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவு வங்கியில் எந்த வித மோசடியும் நடக்கவில்லை என்று கூறி அனைத்து அரசியல்வாதிகளையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் அமலாக்கப்பிரிவு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2020ம் ஆண்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது.

ஆனால் கோர்ட் அமலாக்கபிரிவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு சரன்தேஷ்வர் சர்க்கரை ஆலையை அஜித் பவார் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் பாராமதி அக்ரோ நிறுவனம் தொடர்பான விசாரணையை மீண்டும் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பான வழக்கில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அதில் அஜித் பவாரை குற்றவாளி பட்டியலில் இருந்து அமலாக்கப்பிரிவு நீக்கி இருந்தது. அதன் பிறகுதான் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். ரோஹித் பவார் இப்போது சரத்பவார் அணியில் இருக்கிறார். அவர் சமீபத்தில் மாநில அரசுக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரை காரணமாகவே இந்த ரெய்டு நடந்து இருப்பதாக சரத் பவார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
