வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை அடைந்தவுடன், நடைப்பயணமாகவே அந்தச் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியிருந்த இடத்துக்குச் சென்றேன். அதுவொன்றும் சிறிய தெருவோ அல்லது மறைமுகமான சாலையோகூட கிடையாது. வேலூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பிரதான சாலைதான் அது. திருவண்ணாமலை மார்க்கமாக காட்பாடி, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் இந்தச் சாலை வழியாகத்தான் பேருந்துகள் செல்லும்.
அப்படி ஒரு பரபரப்பான சாலையிலேயே கழிவுநீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேடு நிலவுவது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை… அப்படி என்ன சிக்கல் இருக்கும், இதைச் சரிசெய்வதில்… என்று எனக்குள்ளேயே கேள்விகள் எழ, சில தினங்களாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கும்போல என பதில் கூறிக்கொண்டு, என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
அங்கிருந்த கடைக்காரர்களிடம், `ஏன் அண்ணே… இந்தப் பிரச்னை எத்தனை நாளா இருக்கு?” என பேச்சுக் கொடுக்கையில், “ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த இடம் இப்படித்தான் தம்பி இருக்கு” என்ற அவர்களின் பதில், என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நன்றி
Publisher: www.vikatan.com
