அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது.
எனவே, மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் செய்துவைத்த வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, அவர் மீது தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் வேறு யாரேனும் இவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் அவர்கள் மீதும் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இளவரசன் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், ‘இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7A-ன் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சுயமரியாதைத் திருமணத்துக்கு பொது அறிவிப்பு தேவையில்லை’ என்று கூறியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
