கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை நியமனம் செய்யக்கூடிய முக்கிய துறையில் பணியாற்றினார். போலீஸார் தாக்கல் செய்திருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுஜித் பட்கர், பாலா கதம், ராஜீவ் சாலுங்கே ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
கிச்சடி விநியோகத்தில் 6.37 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் குறைந்த அளவு உணவு பாக்கெட்களை சப்ளை செய்துவிட்டு அதிக உணவு பாக்கெட்கள் சப்ளை செய்ததாக கூறி பில் தாக்கல் செய்து மோசடி செய்திருந்தனர். அதோடு உணவு பாக்கெட்டில் 250 கிராம் உணவு இருக்கவேண்டும். ஆனால் 125 கிராம் உணவு மட்டும் கொடுத்து அதிலும் மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதாவிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் வேண்டப்பட்ட சுஜித் பட்கர் என்பவரை கொரோனா காலத்தில் தற்காலிக மருத்துவமனை நடத்தியதில் நடந்த நடத்திய ஊழல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இப்போது சவான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்ததில் இருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உத்தவ் தாக்கரே அணியில் இடம் பெற்று இருக்கும் தலைவர்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் ராவத் எம்.பி.கூட கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொரோனா காலத்தில் 4 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய முதல்வர் ஷிண்டே அரசு குற்றம் சாட்டி இருக்கிறது. ஆனால் தற்போது ஷிண்டே அரசில் இடம் பெற்று இருந்த அமைச்சர்கள்தான் கொரோனா காலத்திலும் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
