<p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே. சசிகலா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இம்மாதம் 30-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>அதிமுகவில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நீக்க கோரி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மேல்முறையீடு மனுவை ஆகஸ்ட்30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துகொள்வதாக தெரிவித்துள்ளது.</p>
<p>இது தொடர்பாக ஏற்கனவே சசிகலா சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<hr />
<p> </p>
நன்றி
Publisher: tamil.abplive.com
