கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நமது முதல்வர் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.

31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 – 5 வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரம் பேர் பயனடைந்து வருகிறார்கள். எந்த மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றாலும், பள்ளிக்குச் சென்று அங்குதான் காலை உணவை மாணவர்களுடன் உட்கொள்வேன். அதன் மூலம் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் உணவு குறித்தும், மாணவர்கள் வருகை குறித்தும் விசாரிப்பேன். மக்களை சாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞரோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
