அதோடு, ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த சரியான சிந்தனை உள்ளவர்கள் யாரும் இல்லை. ஒருவேளை அப்படி யாரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், எங்களிடமுள்ள பல ஏவுகணைகள் வானில் பாயும். பிறகு, ஒரு எதிரிகூட உயிர்பிழைக்க வாய்ப்பிருக்காது” என்று கூறினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், 1990 முதல் அணு ஆயுத சோதனையை நடத்தாத ரஷ்யா, மீண்டும் அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை மறுத்த புதின், “அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. அதேசமயம் ரஷ்யா அதில் கையெழுத்திட்டு ஒப்புதலளித்திருக்கிறது. எனவே, கோட்பாட்டளவில் ரஷ்ய நாடாளுமன்றம் தனது ஒப்புதலை திரும்பப் பெறுவதும் சாத்தியம்” என்று தெரிவித்தார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com