“சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்; ஆனால்..!" –

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்டோபர் 2) வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதன்பின்னர், காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்படவேண்டும் என மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தியது.

சாதிவாரி கணக்கெடுப்பு

குறிப்பாக, தற்போது நடந்துமுடிந்த ஐந்து மாநில தேர்தலில், `நாங்கள் வெற்றிபெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்’ என காங்கிரஸ் தனது வாக்குறுதியாகவே கூறியது. இதே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில், “பா.ஜ.க ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை” என்று அமித் ஷாவும் கூறினார். இருப்பினும், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்ரீதர் காட்ஜ், “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மக்கள்தொகையைப் பற்றிய தரவுகளை வழங்கும் என்பதால், அரசியல் ரீதியாக சிலருக்கு அது பயனளிக்கலாம். ஆனால், சமூக ரீதியாகவும், தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் அது விரும்பத்தக்கதாக இருக்காது” என்று சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்திருந்தார்.

இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் விளம்பரத் தலைவர் சுனில் அம்பேகர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “சாதிவாரி கணக்கெடுப்பு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளும்போது, எந்தக் காரணத்தினாலும் சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் பிளவுபடாமல் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்

பல்வேறு வரலாற்றுக் காரணங்களால், பல பிரிவுகள், சமூகம், கல்வி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அத்தகைய பிரிவுகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் திட்டங்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளைப் பல அரசுகள் முன்னெடுத்திருக்கின்றன. அவற்றுக்கு, ஆர்.எஸ்.எஸ் தனது முழுமையான ஆதரவையும் தந்திருக்கிறது” என்று சுனில் அம்பேகர் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *