மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா” என்ற பெயரில் கூட்டணியமைத்திருக்கிறது. இந்த கூட்டணியானது, 2024 லோக் சபா தேர்தலை மையமாக வைத்து மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது.


நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் கூட, இந்தியா கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற காட்சிகள் சத்தீஸ்கரில் தனியாகக் களமிறங்குகின்றன. இருப்பினும், இந்தியா கூட்டணிக்கு வாக்கு கொடுத்திருக்கிறோம், என்றும் கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், “2024-ல் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய தேசப்பற்று செயல்” என கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com