தமிழ்நாட்டில் திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால் தான் அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”திமுக ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரம் நடக்கிறது. திரையுலகில் இருப்பவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும். அமைதியாக இருக்கக் கூடாது. படம் எடுத்தால் ரெட் ஜெயன்ட் கேட்கும் அடிமட்ட விலைக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
அத்துடன் எங்கள் ஆட்சியில் முழுமையாக காவல்துறைக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. விதவிதமான காய்ச்சல் திமுக ஆட்சியில் தான் வரும். மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் இதெல்லாம் திமுக ஆட்சியில் தான் வந்தது. 10 மாதங்களாக சுகாதாரத்துறை தூங்குகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட மட்டும் தான் செய்கிறார். காவிரி பிரச்சனையில் கோட்டை விட்டுவிட்டார்கள். விவசாயிகள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் அனைவரும் பாதிக்கின்றனர்” என்றார்.
நன்றி
Publisher: 1newsnation.com
