கிராம சுகாதார செவிலியர்களின் நேரடி நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்த பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முறையாக அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்ததுடன், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருமே கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கூறி, அரசு தரப்பில் விரிவான பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Post
Tue Oct 31 , 2023
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற e-kyc அப்டேட் செய்வதற்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 முதல் 14 தவணைகள் வரை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. e-KYC என்பது மின்னணு முறையில் […]
நன்றி
Publisher: 1newsnation.com
