ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக தெரிந்தார். ஆனால், இப்போது தீவிரவாதியாக தெரிவதன் மூலம் தி.மு.க அரசின் இரட்டை வேடம் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அந்த நிலங்கள் விவசாய பணிகளுக்கு பயன்படக்கூடியதாக இருந்ததால் நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை கைவிட்டு திட்டங்களையும் ரத்து செய்து இருக்கிறார். அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

காலம் மாறும், காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார். அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகிற வகையில் நடவடிக்கைகளை எடுப்பார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு பாதுகாப்பு, அனுமதி வழங்கி நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுத்தார். அதுதான் உண்மையான ஜனநாயகம். தங்கள் நிலங்கள் அபகரிப்பதை கண்டித்து போராடும் மக்களை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுப்பது வேதனையாக இருக்கிறது.
போராட்டத்தால் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க அந்த அடிப்படை உரிமையைக் கூட இந்த அரசு கொடுக்க மறுக்கிறது. இந்த கொடுங்கோல் ஆட்சி நீண்ட நாள் இருக்காது என்பது விவசாயிகளின் சாபமாக இருக்கிறது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கனியோடு பரிசீலனை செய்து நியாயத்தின் பக்கம் நிற்பார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
